Published on 26/12/2018 | Edited on 26/12/2018

கடந்த 2004ம் ஆண்டு இதே நாளில், சுனாமி எனும் ஆழிப்பேரலை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை திருப்பிப்போட்டது. ஆயிரக்கணக்கான உயிர்கள் அதில் பலியாகின. அந்தக் கொடுமை நடந்து இன்றோடு 14 ஆண்டுகள் ஆகின்றன.
கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அந்த துக்கத்தை அனுசரிக்கும் வகையில் கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். தங்கள் உறவுகளை தொலைத்த மக்களின் மனதிலுள்ள அந்த சோகம் இன்னும் ஆறவில்லை. என்பது அவர்களின் உணர்வுகளின் வாயிலாக தெரிகிறது. தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் துக்கத்தை அனுசரிக்கும் விதமாக, மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.