Published on 13/01/2024 | Edited on 13/01/2024

திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என்ற முதலிடம் கிடைத்திருக்காது மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருச்சி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினாலும் அனைத்து திட்டத்திற்கும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். தூய்மையான மாநகராட்சி விருது பெற்றதற்கு முக்கிய காரணமே குப்பை இல்லாத மாநகராட்சி என்று தேர்ந்தெடுக்கப்பட்டது தான்.
இன்னும் மூன்று மாதங்களில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி, தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாகவும், தற்போது தூய்மை மாநகராட்சியாகவும் விருது பெற்றதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பே காரணம்” என்றார்.