திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கு தொடர்ந்த 5 நாட்களுக்கு மேல் எரிந்து கொண்டிருக்கிறது. நெருப்பை அணைப்பதற்கு மாநகராட்சி ஊழியர்கள் கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நெருப்பு புகையினால் அந்த பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் துறையின் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் அரியமங்கலம் பகுதியிலுள்ள குப்பை_கிடங்கை நிரந்தரமாக இடமாற்றம் செய்யக்கோரி அரியமங்கலம் பகுதி மாநகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் அறிவித்தனர். போராட்டத்திற்கு தயாரான நிலையில் மாநகராட்சி அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க முதற் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பேச்சுவார்த்தையில் சுற்றுச்சூழல் அணித்தலைவர் ரஹ்மத்துல்லாஹ் SDPI கட்சி மாவட்ட பொருளாளர் பிச்சைக்கனி கிளை தலைவர் இஸ்மாயில்ராஜா கிளைச்செயலாளர் அப்பாஸ் மந்திரி கலந்து கொண்டனர் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். தற்காலிகமாக முற்றுகை போராட்டம் தள்ளி வைத்தனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து அரியமங்கலம் குப்பை கிடங்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்யக்கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் விரைவில் அரியமங்கலம் குப்பை கிடங்கை நிரந்தர இட மாற்றம் செய்து தருவதாக உறுதியளித்தார்.