Published on 13/06/2022 | Edited on 13/06/2022
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார். விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் திருச்சி மேல் அம்பிகாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ரிஷி(19) என்பதும், பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.