Skip to main content

"இளைஞர்கள் முன்வந்து நாட்டுக்கு உழைக்க வேண்டும்" - ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

trichy district manapparai retired army man chidambaram advised youngster 

 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ராணுவ வீரர் சிதம்பரம் (வயது 60). இவர் கடந்த 30 வருடங்களாக எலக்ட்ரானிக், மெக்கானிக்கல் இன்ஜியராக இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார்கில் மற்றும் கல்வான் பள்ளத்தாக்குகளில் தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்காக தந்து ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு திரும்பும் அவருக்கு சிவகங்கை படை வீரர்கள் பாசறை, ஒருங்கிணைந்த தமிழக பட்டாளம், மணவை அக்னி சிறகுகள், சேயோன் இராணுவ பயிற்சி மையம் மற்றும் கல்வி அறக்கட்டளைகளை சேர்ந்த நிர்வாகிகள், திருச்சியை சேர்ந்த ராணுவ வீரர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

போபாலில் இருந்து இரயில் மூலம் திருச்சிக்கு இன்று காலை வந்து சேர்ந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்க வந்த திருச்சியை சேர்ந்த ராணுவ வீரர்கள் கூறுகையில், "போபால் மற்றும் செகந்தராபாத் பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி பள்ளியில் மாஸ்டர் டெக்னிசியனாக பணியாற்றி பல டெக்சினிசியன் படை வீரர்களை உருவாக்கி உள்ளார். அவரால் தான் நாங்கள் பல இடங்களில் மிகத் திறமையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிதம்பரம், "நான் கடந்த 30 வருடங்களாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று திரும்பி உள்ளேன். நான் பல இடங்களில் பணியாற்றிவிட்டு வந்துள்ளேன். நாட்டிற்காக சேவை செய்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதேபோல் இளைஞர்களும் நாட்டுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும். அக்னிவீர், அக்னிபாத் போன்ற திட்டங்களின் மூலம் இளைஞர்கள் இராணுவத்திற்குள் வர வேண்டும். 4 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்தாலும் 25 சதவீதம் பேர் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதேபோல் பணிக்காலம் முடிந்து வெளியே வந்தாலும் நமக்கு வேலை கிடைக்கும். எனவே இளைஞர்கள் முன்வந்து நாட்டுக்கு உழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.