திருச்சியில் பெரும்பிடுகு முத்திரையர் 1344 பிறந்தநாள் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த சிலைக்கு திருச்சியில் உள்ள அனைத்து கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருச்சி பிஜேபி சார்பில் மாவட்ட தலைவர் ராஜய்யன் தலைமையில் முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கீழே இறங்கி வந்தனர். அப்போது பிஜேபியின் மாநில விவசாய அணி நிர்வாகி ராஜேந்திரன் மாவட்ட பிரச்சார அணி சார்பில் நாகேந்திரன் ஆகியோர் நாட்டு வெடியை கொண்டு வந்து நடுரோட்டில் வைத்து திரியில் தீயை வைத்தனர்.
திடிர் என தீ வைக்கப்பட்டால் அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் நாட்டு வெடி சத்தத்திற்கு பயந்து அங்கிருந்து தெறித்து ஓடினார்கள். அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் தீ பற்ற வைத்தவுடன் ராஜேந்திரனும், நாகேந்திரனும் கூட்ட நெரிசலில் முண்டியடித்து ஓட முயற்சித்தனர். அதற்குள் பலத்த சத்தத்துடன் வெடி வெடித்தது. இதில் ராஜேந்திரன் நாகேந்திரன் இருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் எப்படி நாட்டுவெடி வெடித்தனர் என்பது குறித்து போலிசார் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.