சென்னையில் தனியார் நிறுவன பெண்கள் கழிவறையில் ஸ்பை கேமரா வைத்து சிக்கிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அடுத்த அடையாறில் அஸ்வினி பிஷரிஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தில் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஹார்ட் டிஸ்க்கை ஆராய்ந்த அதிகாரிகள், ஊழியர் செந்தில்குமார் பெண்கள் கழிவறையில் ஸ்பை கேமரா வைத்திருப்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் கழிவறையில் கேமரா வைத்தது தெரிய வந்ததால் ஊழியர் செந்தில்குமார் நிறுவன வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
![chennai private company employee fixed camera in women toilet hard disk incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/C5V6xaXSL470yh5jz3-M4-9Nlq4f2yYWatiq7yHkpXE/1575193067/sites/default/files/inline-images/toilet4.jpg)
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.