Skip to main content

அதிமுக மா.செ. ஏற்பாடு செய்த இணைப்பு விழாவை ரத்து செய்த அமைச்சர்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தீபா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர். சி. கோபி தலைமையில் 1000க்கும் மேற்பட்ட தொண்டர்களை அதிமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

 

k

 

தீபா பேரவையில் மா.செ.வாக இருந்த ஆர்.சி.கோபி மற்றும் படையப்பா ரெங்கராஜ் ஆரம்பத்தில் திருச்சியில் தீபா பேரவைக்காக பிரமாண்ட பேரணியை நடத்தி அதிமுகவினரை மிரளவைத்தவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தீபா  அரசியிலில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் ஆர்.சி.கோபி மற்றும் படையப்பா ரெங்கராஜ் ஆகியோரை அதிமுக இணைப்பதற்காக வேலையில் திருச்சி மா.செ. குமார் ஏற்பாடு செய்தார். அதன் அடிப்படையில் இணைப்பு விழாவிழாவிற்கு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். 


அதிமுக மா.செ. குமார் தலைமையில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி எம் எல் ஏ வும் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சருமான வளர்மதி ஆகிய இருவரும் சேர்ந்து நடத்திய பிரச்சனையில் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டது என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். 

 

d

 

ஸ்ரீரங்கத்தில் கட்சியை காலி பண்ணிய டைமண்ட் திருப்பதி ! 

திருப்பதிக்கும் மா.செ.க்கும் என்ன பிரச்சனை என்று சீனியர் தொண்டர்களிடம் பேசுகையில்... டைமண்ட் திருப்பதி பற்றி பெரிய கதையே சொல்கிறார்கள். டைமண்ட் திருப்பதி முன்னாள் அமைச்சர் கே.கே.பி. வீட்டிற்கு அருகே இருந்தார் என்கிற ஒரே காணத்திற்காக அப்போதைய மா.செ. முருகையனிடம் சிபாரிசு செய்தார். அப்போதே திருப்பதியின் தம்பி திமுக வட்ட செயலாளர் என்பதால் திருப்பதிக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு ஏற்பட்டது. அதையும் மீறி கட்சியில் பொறுப்பு கொடுத்தனர். 

 

அதன் பிறகு நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் தேர்தலுக்கு கொடுத்த பணத்தை கையாடல் செய்து விட்டார் என்று தலைமை வரைக்கும் புகார் சென்றது. அப்போது விசாரணை கமிட்டியில் இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் மா.செ. முருகையனிடம் திருப்பதி குறித்து புகார் கடிதம் கொடுக்காமல் காப்பாற்ற முயற்சி செய்தார். அதன் பயனாக பொள்ளாச்சி ஜெயராமன் மா.செ. முருகையன் மீது தலைமையில் புகார் செய்து முருகையனின் மா.செ. பதவியே பறி போனது. 

 

d

 

அதன் பிறகு திருப்பதி கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரபூர்வமான வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் மனோகரனுக்கு எதிராக சுயேச்சையாக எதிர்த்து போட்டியிட்டார். அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு மனோகரனிடம் தஞ்சம் அடைந்த பிறகு அதன் பிறகு ஸ்ரீரங்கம் பகுதியில் யார் அமைச்சராக வருகிறார்களோ அவர்களுக்கு எல்லாமுமாக மாறிவிடுவார். அவர்களின் ஆதரவிலும் கட்சியை மறந்து தன்னை மட்டும் வளர்த்துக்கொண்டார். 

 

ஜெ. மறைவுக்கு  பிறகு தான் குமார் மா.செ.வாக அறிவிக்கப்பட்டார். ஜெ. உயிருடன் இருக்கும் போது மா.செ. என்கிற பதவி அமைச்சர்களை விட அதிகார மிக்க பதவியாவும் அவருக்கு கட்டுபட்டும் வந்த நிலையில் தற்போது உள்ள ஆளும் கட்சியின் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அமைச்சர்கள் இரண்டு பேரும் எங்களுக்கு அவரவர் தொகுதியை ஒதுக்கிவிடுங்கள்.  நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று ஸ்ரீரங்கத்தை அமைச்சர் வளர்மதியும் கிழக்கு தொகுதியை வெல்லமண்டி நடராஜனுக்கு பிரித்து கொண்டனர். 

 

இந்த நிலையில் தான் ஸ்ரீரங்கத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடைபெற்றது. மா.செ. குமார் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளரான டைமண்ட் திருப்பதிக்கு ஒரு பெரிய தொகை கொடுத்து தேர்தலை சந்திக்கின்றனர். ஆனால் இதில் 12 மெம்பர்களில் 3 நபர்கள்தான் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். மீதி 9 பேர்களும் தி.மு.க. ஆதரவில் வெற்றி பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் மண்ணை கவ்வியது. 

 

d

 

ஆளுங்கட்சியாக இருந்தும், தொகுதி எம்.எல்.ஏ. மந்திரியாக இருந்தும் அமைச்சர் வளர்மதி தனக்கும் இந்த தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லாதாது போல் இருந்தது எல்லோருக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்திரையர் சமூகத்தின் சார்பில் பிரதிநிதியாக இருக்கும் வளர்மதி ஸ்ரீரங்கம் தொகுதியில் எந்த கட்சிகாரர்களுக்கும் செய்யாமல் போனதே ஸ்ரீரங்கம் பண்டக சாலை தேர்தலில் கோட்டை விட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இதனால் பணம் கொடுத்த மா.செ.குமார் ஏன் தோற்றுப்போனோம் என திருப்பதியை விசாரிக்க அழைத்த போது வராமல் இருந்த டைமண்ட் திருப்பதி அமைச்சர் வளர்மதி பாதுகாப்பில் இருந்து கொண்டு மா.செ. குமாருக்கு எதிராக செயல்பட்ட ஆரம்பித்தார். 

 

திருப்பதியின் முந்தயை அரசியல் நடவடிக்கை பிடிக்காமல் வெளியேறிய ஆர்.சி.கோபி உள்ளிட்ட அதிமுக கட்சியினர் தீபா பேரவை கலைப்புக்கு பிறகு மா.செ. குமாரிடம் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று முடிவு செய்து தான் இந்த இணைப்பு விழாவை ஏற்பாடு செய்தார்கள். 

 

இந்த இணைப்பு விழாவிற்கு அமைச்சர் வளர்மதியோ - பகுதி செயலாளர் டைமண்ட திருப்பதியோ எந்த ஏற்பாடு செய்யாமல் கடைநேரத்தில் டைமணட் திருப்பதி எனக்கு அழைப்பு இல்லை. அமைச்சர் வளர்மதியோ இந்த நிகழ்ச்சிக்கு என்கிட்ட அனுமதி வாங்காமல், என்னிடம் பேசாமல் ஏற்பாடு பண்ணிட்டாங்க என்று வர மறுத்துவிட்டாராம். 

 

அமைச்சர் வெல்லமண்டியும் மா.செ. குமார் வந்தால் பிரச்சனை பண்ணுவேன் என்று பிரச்சனை செய்ய,  இதை தெரிந்து கொண்ட மா.செ.குமார் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார். 

 

இணைப்பு நிகழ்ச்சி ரத்து குறித்து படையப்பா ரெங்கராஜ் கூறுகையில், நாங்கள் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான். கட்சியை பலப்படுத்தவே நாங்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகின்றோம். ஆனால் அ.தி.மு.க.வில் ஒரு சிலர் பதவியில் இருக்கும் போது நாங்கள் இணைந்தால் அவர்களுக்கு வருமானம் பாதிக்கும் என கருதி கட்சியை வளர்க்கவும், பலப்படுத்தவும் பாடுபடாமல் தடுக்கின்றனர். இது கட்சிக்கும், மறைந்த ஜெயலலிதாவிற்கும் செய்யும் துரோகம் என்றார். 

சார்ந்த செய்திகள்