Published on 14/03/2020 | Edited on 14/03/2020
கடந்த 12 ஆம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்படி மக்களிடம் மாற்றத்துடன் கூடிய எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.