Skip to main content

கரோனாவிலிருந்து காக்க உயிர்த்தியாகம் செய்த செவிலியர்களுக்கு அஞ்சலி..! (படங்கள்)

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

உலக செவிலியர் தினமான இன்று (12.05.2020) கரோனா தடுப்புப் பணியின்போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த செவிலியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 

உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களின் சேவையைப் போற்றும் வகையிலும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், நவீன செவிலியர் முறையை உருவாக்கிய சமூக சேவகர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12 ஆம் நாள் சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில் கரோனா தொற்று உள்ளவர்களை மீட்கும் பணியில் செவிலியர்களின் பங்கு முக்கியமானது. பணியில் ஈடுபடும்போது கரோனா தொற்று ஏற்பட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் செவிலியர்களின் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. 
 

அவ்வாறு சேவையின் போது உயிரிழந்த செவிலியர்களை நினைவுகூறும் வகையில் சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஜாய்ஃபுல் லைஃப் ஹெல்த் மற்றும் மெடிக்கல் ஃபவுண்டேஷனில் ‘தமிழ்நாடு பட்டதாரி செவிலியர்கள் சங்கம்’ சார்பில் மெழுகுத் திரி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்