
சேலம் அருகே காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது 5 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே ரெட்டியூரில் காவிரி ஆற்றில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது 6 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர், 6 பேரில் தனுஸ்ரீ என்ற இளம்பெண் ஒருவரை மட்டும் உயிருடன் மீட்டனர்.
ஆற்றில் மூழ்கிய மைதிலி, சரவணன், தனுஸ்ரீயின் சகோதரி வாணி ஸ்ரீ, ரவீனா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இதில், 9 வயது சிறுவன் ஹரிஹரனை தீயணைப்புத்துறை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மீட்பு பணிகள் குறித்து மேற்பார்வை செய்து வருகிறார். காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.