தாம்பரத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், மாடம்பாக்கம் மற்றும் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் என்ற வாசக பலகைகளோடு மாணவர்கள் சாலையில் கோஷமிட்டபடி சென்றனர். இதில், காஞ்சிபுரம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோகரன், மாடம்பாக்கம் பேரூராட்சி தனி அலுவலர் செண்பகராஜன், செயல் அலுவலர் ரவிக்குமார் உட்பட பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.