விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுலாத்துறை விழுப்புரம் மாவட்டம் சார்பில் உலக சுற்றுலா தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சின்னசாமி தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு "சுற்றுலாவும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் நடனப்போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் பரிசளிக்கப்பட்டது.
மேலும் "சுற்றுலாவும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு சுற்றுலாத்துறையின் நன்மைகளையும் அதன் மூலம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்களையும் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி, கண்ணன், செஞ்சி கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, சுற்றுலா வழிகாட்டி மார்ட்டின், ஹரிஷ் ராம், செஞ்சி கோட்டை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.