Skip to main content

தக்காளியின் விலை சற்று குறைந்தது!

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

Tomato prices have dropped by Rs 20 per kg today

 

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த இரு வார காலமாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணை பசுமை கடைகள் மூலம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

மேலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கிய தமிழக அரசு, முதல் கட்டமாக வட சென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25 கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் என மொத்தம் 82 கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும், பருப்பு வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

 

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 110க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.130க்கு விற்ற நிலையில், இன்று ரூ.110க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்