தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6,423 பேர் தமிழகத்திலும் மற்றவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,92,966 அதிகரித்துள்ளது.
அதேபோல் 52,939 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,693 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் குணமடைந்தோர் விகிதம் 70.89 சதவீதமாக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரேநாளில் 1,336 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 20-வது நாளாக 2000-க்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவவோர்களை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்படி, 88 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 63 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 25 பேரும் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பில்லாத 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் மொத்த ஒட்டுமொத்த உயிரிழப்பு என்பது 3,232 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 54-வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 1,947 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 214 பேரும், திருவள்ளூரில் 188 பேரும், காஞ்சிபுரம் 80, மதுரை 183 ராமநாதபுரம் 53, திருச்சி 50 என பலி எண்ணிக்கை உள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை 1,285 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 5,136 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் ஒரே நாளில் 415 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.