Skip to main content

இன்று தொடங்குகிறது பிளஸ்டூ பொதுத்தேர்வுகள்!!

Published on 01/03/2019 | Edited on 01/03/2019
exam

 

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. முதன்முறையாக 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதற்குமுன்  தேர்வுகளில் ஒரு பாடத்திற்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. அதேபோன்று மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறையை ரத்து செய்யப்பட்டு, இந்த ஆண்டு ஒரே தாளாக மொழித் தேர்வுகள் நடைபெறுகின்றன.

 

 முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 45 மணிக்கு தேர்வு முடிவடையும். தமிழகம் புதுச்சேரியில் 2941 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு வளாகத்திற்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு பணியில் 49 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க நான்காயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 19ம் தேதி இந்த பொதுத் தேர்வுகள் நிறைவு பெற்று தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்