Published on 20/02/2020 | Edited on 20/02/2020
2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து துறைச்சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று (19/02/2020) மாலை தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (20/02/2020) தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் என்ற பெயரில் சட்ட முன் வடிவை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.