Skip to main content

விதிகளை மாற்றும்படி டி.என்.பி.எஸ்.சி. ஆசிரியர் தேர்வாணையத்துக்கு கொரியா தமிழ்ச்சங்கம் கோரிக்கை!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020

வெளிநாடுகளில் வேலை செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வாணையம் கேட்டுள்ள சான்றிதழ் விவரங்கள் தேவையற்ற கால விரையத்தை ஏற்படுத்துவதாக கொரியா தமிழ்ச்சங்கத் தலைவர் இராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.


  2222

 

இதுதொடர்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி குமார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மதிமுக பொதுக்குழு உறுப்பினர் காரை.செல்வராஜ் ஆகியோரிடம் அவர் விரிவாக பேசினார்.

 

nakkheeran app



அந்த உரையாடல் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வாணையத்தால் (Tamilnadu Teachers Recruitment Board TRB) உதவி பேராசிரியர் மற்றும் தொடர்பான பணிகளுக்கான விண்ணப்பத்தில் வெளிநாட்டில் வேலைபார்த்த/பார்க்கும் விண்ணப்பதாரர்களுக்கு கேட்பட்டிருக்கும் பணிபட்டறிவிற்கான சான்றிதழ் (Experience Certificate) மற்றும் தொடர்பான தேவைப்பாடுகள் உள்ளிட்டவைகளால் அதீத படிவ வேலை, வேலைநேர நேர விரயம் மற்றும் பண விரயம் ஆகியவற்றால் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. 
 

இத்தகைய இடர்பாடுகள் கொரியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியறிவு பெற்ற நமது இளைஞர்களை களைப்படைய செய்து, நாட்டில் மூளை வறட்சிக்கு வழிவகுக்கிறது. தற்போது குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப விதிமுறைப்படி வேலைசெய்த ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவரிடமும் ஆங்கிலத்தில் பெறப்படும் சான்றிதழை நோட்டரி பப்ளிக் கையெப்பத்திற்கு (Notarization at Law Firm) உள்ளூர் மொழியில் மாற்றம் செய்து, பின்னர் அப்போஸ்டைல் (Apostille) மற்றும் தூதரக ஒப்பம் (Attestation at Embassy) பெறுவது போன்ற அதீத வேலைப்பாடுகள் தேவைப்படுகிறது. 
 

இன்று சான்றிதழின் உண்மைத்தன்மையையை நேரடியாக சரிபார்க்க பல தொடர்பு வழிகள் இருக்கும் நிலையில் பணிசெய்த ஆய்வுக்குழுவின் தலைவர் மற்றும் ஆய்வுத்துறையின் இயக்குனர் ஆகியோரின் சான்றொப்பத்துடன் கூடிய பட்டறிவு சான்றிதழ் என்ற அளவில் எளிமைப்படுத்தினால் நல்லது. எனவே, எதிர்காலத்தில் கூடியமட்டும் படிவ வேலைகளை எளிமைப்படுத்தி இடர்பாடுகளை களைய உரிய உதவிகளை செய்ய வேண்டும்” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டதாக தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்