திருவாரூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் +1 மாணவர் பள்ளி அறையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான்.

திருவாரூரில் பிரபலமான தனியார் பள்ளியானது, கல்வியைத்தாண்டி விளையாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி சாதனையாளர்களாக மாற்றுவார்கள். அந்தப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் பதக்கங்களை பெற்றிருக்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாலிபால் பயிற்சியை முடித்துவிட்டு சென்ற ரஞ்சித் என்கிற மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து விசாரித்தோம். நாகப்பட்டினம் சுனாமிகுடியிருப்பை சேர்ந்த சீனிவாசனின் மகன் ரஞ்சித். மீனவ சமுகத்தைச் சேர்ந்த ரஞ்சித் வாலிபால், உள்ளிட்ட ஸ்போட்ஸ்களில் திறமையானவராக இருந்துள்ளான். இந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.