Skip to main content

ஆம்பூர் வனச்சரக காவலருக்கு கரோனா... பூட்டப்பட்ட அலுவலகம்...

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
tirupattur ambur - Forest range office




திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் வனச்சரகத்தில் பணியாற்றுகிறார் 28 வயதான அந்த இளம் காவலர். அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை இரண்டு தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டுள்ளது.
 

அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பணிபுரிந்த வனச்சரக அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தற்போது கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த இளம் ஊழியர் இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரை சேர்ந்தவர். அவரது குடும்பத்தாரையும் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
 

அதுபோல் வேலூர் மாவட்டம், வடக்கு காவல்நிலைய காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கும் கரோனா வந்துள்ளது. அதனை தொடர்ந்து காவல்நிலையம் பூட்டப்பட்டது. அங்கு பணியாற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 

 

 

சார்ந்த செய்திகள்