Published on 14/11/2018 | Edited on 14/11/2018

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் பயணிகள் ரயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை ராமேஸ்வரம் இடையே இருமார்க்கத்திலும் நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் திருப்பதி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் மதுரை இடையே நவம்பர் 15ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.