டிக்டாக் பிரபலமான சூர்யா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிக்டாக்கில் பிரபலமடைந்த சூர்யாதேவி. சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களைத் திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம். சூர்யாதேவிக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். கடந்த 21 ஆம் தேதி மணப்பாறை காவல்நிலையத்தில் தனது கணவரும், அவரின் சகோதரரும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மறுபுறம் சூர்யாதேவி மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் தான் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் வந்த சூர்யாதேவி காவல்நிலையம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு அவர் மேல் தண்ணீர் ஊற்றி காப்பாற்றியுள்ளனர். சூர்யாதேவி கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் புகாருக்கு மனு ரசீது கொடுத்துள்ளனர். ஆனாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத சூர்யாதேவி காவல்நிலையம் முன்பே காவல்துறையினரை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். சூர்யாதேவி தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் காவலர் லாரன்ஸ் மேரி அளித்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல்துறையினர் சூர்யாதேவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி அவரை 6 மாதகாலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரை திருச்சி சிறையில் அடைத்தனர்.