Skip to main content

வீட்டில் நகை தோஷம் கழிப்பதாக சொல்லி நகையை மோசடி செய்த கும்பல் கைது ! 

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

 

துறையூர் புதுகுடியிருப்பு வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வருபவர் சின்னம்மாள் 65வயது.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறி சொல்லும் ஒருவர் சின்னமாளிடம் உங்களுக்கு கண்திருஷ்டி போட்டிருக்கு, நகையில் தோஷம் ஏற்பட்டிருக்கு அதை போக்க வேண்டும் என்றால் உங்களி்டம் இருக்கும் நகை ஏதாவது இருந்தால் கொடுங்கள் நான் பூஜை செய்து அதை சரி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். 

 

t

 

இதனால் சின்னம்மாள் தன் கையில் அணிந்திருந்த ஒன்னறை பவுன் வளையலை கழட்டி கொடுத்திருக்கிறார். அதன் பிறகு இரண்டு நாள் கழித்து அந்த குறி சொல்லும் நபர் மற்றும் அவருடைய நண்பர் என்று ஒருவர் என இரண்டு பேராக வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். 

 

அப்போது அந்த குறி சொல்லும் நபர் நீங்கள் கொடுத்த நகையை வைத்து உங்கள் தோஷத்தை நீங்கி விட்டோம். நாங்கள் பூஜையில் செய்த நகையுடன் உங்கள் வீட்டில் உள்ள நகைகள் அனைத்தையும் கொண்டு வந்து வையுங்கள். நாங்கள் பூஜை செய்தவுடன் அனைத்து நகைகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த வளையல் இங்கு உள்ளது. இதை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி கொடுத்திருக்கிறார்கள். 

 

நீங்கள் சொம்பில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று சொல்ல சின்னம்மாளும் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்துள்ளார். அந்த தண்ணீரில் தங்க வளையலையும் போட்டு விட்டு வீட்டில் உள்ள எல்லா தங்க நகைகளையும் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் கொஞ்சம் சந்தேகம் அடைந்த சின்னம்மாள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து இருவரையும் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். இதில் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை அடுத்த கொசவம் பட்டியில் சேர்ந்த பூபதி, மற்றும் கிருஷ்ணன் என்றும் இருவரையும் போலிசில் ஒப்படைத்து நகையை மோசடி செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்