Published on 29/09/2020 | Edited on 29/09/2020

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று (28.09.2020) மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பொழிந்தது. இந்த இடி மின்னலில் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் நிஷா(13), மகன் கவியரசன்(11) ஆகிய இருவரும் மணப்பாக்கம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் மாடு மேயத்து விட்டு ஸ்ரீதர் என்பவர் நிலத்தின் அருகே மாடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது இடி மின்னல் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து புதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து இருவரின் சடலங்களை உடற்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடி மின்னல் தாக்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.