ஓலா, உபேர் ஆப்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை வாடகை கார் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாகன வாடகை கட்டணத்தை ஓலா, உபேர் நிர்ணயிக்கக் கூடாது. ஓலா, உபேர் செயலிகளை தணிக்கை செய்து அரசு அங்கீகரிக்கும் வரை இச்செயலிகளை தடை செய்ய வேண்டும். ஓட்டுநர்களுக்கு கடுமையான பணிச்சுமையை ஏற்படுத்தும் ஸ்கீம்களை தடை செய்ய வேண்டும். செலிகளால் ஏற்படும் குளறுபடிகளைக் காட்டி ஓட்டுநர்களிடம் அபராம் விதிக்கக் கூடாது.
தமிழக அரசு, உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுநர்களின் பிரதிநிதிகள் துணையுடன் ஒரு நிபுணர் குழுவை அமைத்து, ஒட்டுநர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். செயலிகளின் செயல்பாட்டை தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டும். இடைத்தரகர்களை , உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் அடக்கும் சர்வாதிகாரர்கள் அல்லாத இடைத்தரகர்களாக செயல்பட வைக்க வேண்டும் என்று தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.