இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலுடன் திருமணம் செய்து கொண்ட ஹதியாவின் திருமணம் செல்லாது என்று கேரளா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த விசாரணையில் 89 கலப்பு திருமணங்களில் 11 திருமணங்களை தேர்வு செய்து என்ஐஏ விசாரணைக்கு எடுத்து கொண்டது. அந்த விசாரணையின் போது என்ஐஏ தரப்பு இந்த திருமணங்களில் மதம் மாறி திருமணம் செய்ய தூண்டியதாக எந்த விதமான ஆதாரங்களோ, குறிப்பிட்ட நபர் மதம் மாற கோரி தூண்டியதாக எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.
இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு ஹதியா மாறி தனது காதலன் சபின் ஜகனுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இந்த திருமணம் செல்லும் என்றும் ஹதியாவிற்கு தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்ய உரிமை உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.