தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சித்ரவதை மரணம் தொடர்பான விசாரணையை ஏ.டி.எஸ்.பி. விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ.அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினரர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி கிளைச் சிறை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் கூறுகின்றனர்.
இதனிடையே தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் ஹார்டிஸ்க் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தந்தை, மகனின் உடைகள், பி.வி.சி. குழாய், லத்தி, பிஸ்கட், பிரெட் உள்ளிட்டவையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து மதுரை முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஏற்கனவே மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.