Published on 21/03/2019 | Edited on 21/03/2019
அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக வேட்பாளராக ஜோதிமுத்து களத்தில் உள்ளார். இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை அறிமுகம் செய்துவைத்து பேசினார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/fo1ohx4IZvHUjN8bOxgyEQ-Eu8vHZRHM6ymQnpIOR4g/1553165014/sites/default/files/inline-images/srn.jpg)
அப்போது பேசிய சீனிவாசன், ‘’மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். மோடியின் பேரனான ராகுல் காந்தியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்’’ என தெரிவித்தார். இந்திராகாந்தியின் பேரன் என்பதை தவறுதலாக குறிப்பிட்டு அவர் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.