ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த பொதுமக்களின் போராட்டத்தில் வன்முறையை தடுக்க துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், ஷார்ப் ஷூட்டர்ஸ் ஸ்னைப்பர் எனப்படும் தூரத்தில் இருந்து குறிபார்த்து சுடும் திறமையுள்ள போலீசாரை அழைத்து வந்து அப்பாவி மக்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு காட்சியில், வேனின் மீது ஏறி ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியுடன் ஏறுகிறார். குறி வைத்து சுட முயற்சிக்கிறார். அப்போது கீழேயிருந்து ஒரு போலீஸ்காரர் “ஒருத்தனாவது சாகணும்” என்று கூறுகிறார். அந்த ஆடியோவும் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த போலீஸ்காரர் சுடுகிறார். ஆனால் மறுமுனையில், யாராவது குண்டடிப்பட்டு விழுந்தார்களா என்ற காட்சி அதில் இல்லை. குருவி சுடுவதுபோல சுட்டுள்ளனர். இதன் மூலம், திட்டமிட்டே போராட்டக்காரர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது.