Published on 22/01/2020 | Edited on 22/01/2020
திருவாரூர் மாவட்டத்தில் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை வடியச்செய்து விரைந்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடையினை செயின் டைப் அறுவடை இயந்திரம் கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அறுவடை செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து, அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதன்படி வேளாண் பொறியியல் செயின் டைப் இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 1,415 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வீல் டைப் இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 875 வாடகையும், தனியார் செயின் டைப் இயந்திரங்களுக்கு ரூபாய் 2,000 வாடகையும், தனியார் வீல் டைப் இயந்திரங்களுக்கு ரூபாய் 1,450 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.