Published on 09/11/2018 | Edited on 09/11/2018
திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட சாப்பாவூரில் ஜெகஜீவன்ராம் தெருவில் பாண்டித்துரை(50) என்பவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மற்றும் அவரது மனைவி தமிழரசி(37) வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணி அளவில் திடீரென்று வீட்டின் சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்ததில் விழுந்தது.

இதில் படுகாயமடைந்த பாண்டித்துரை மற்றும் அவரது மனைவி தமிழரசி அங்கிருந்து மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.