திருவாரூர் அருகே மனைவி மீது சந்தேகத்தின் காரணமாக வீட்டிலிருந்த சிலிண்டரை திறந்துவிட்டு மனைவிக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் 43. இவர் கேரளாவில் கூலித்தொழில் செய்து வருகிறார். விடுமுறையில் நேற்று ஊர் திரும்பியுள்ளார். செந்தில்குமாரின் மனைவி அமராவதி 39. இவர்களுக்கு ஒரு மகன் நித்திஷ்வரன் மற்றும் நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளனர் .
இந்நிலையில் இன்று காலையில் செந்தில்குமார் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில், வீட்டில் உள்ள சமையல் கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு கொலை செய்ய முயற்ச்சித்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த மனைவி அமராவதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதனைத் தெரிந்துகொண்டு அங்கிருந்து தப்பியோடிய செந்தில்குமரை அருகில் இருந்தவர்கள் விரட்டி சென்றனர். ஆனால் செந்தில்குமார் அதற்குள் அருகில் இருந்த தோப்பில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து கொரடாச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் காரணமாக மனைவியை தீவைத்து கொளுத்தி விட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் இரண்டு குழந்தைகள் ஆதரவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.