திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிதம் கடந்த ஆண்டுகளில் குறைவாக உள்ள 75 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிதத்தை உயர்த்துவதற்காக காலை மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டும், சிறப்பு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த பயிற்சிகள் சரியாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்ய முடிவு செய்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இன்று ஜனவரி 2ந்தேதி, கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிதம் உயர்வதற்கும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார். மேலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி சதவிதத்தை உயர்த்தி எங்கள் பள்ளிக்கு ஆசிரியர்களுக்கு பெற்றோர்களுக்கு பெறுமை சேர்போம் என்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.
அதோடு, கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை மூலமாக இந்த பருவத்துக்காக வழங்கப்படும் பாடப்புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டப்பின் மதிய உணவு சாப்பிட்டார். கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுடன் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவிதம் உயர்வதற்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.