திருவண்ணாமலை நகரில் செயல்பட்டு வருகிறது பிரபல வங்கியான கரூர் வைஸ்யா வங்கி. இந்த வங்கியில் ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பலரும் தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். அப்படி அம்மக்கள் வைத்த தங்கநகைகளை வங்கயில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கூட்டு சேர்ந்து தங்கநகைகளை எடுத்துவிட்டு அதற்கு பதில் கவரிங் நகைகளை வைத்துள்ளனர்.

வங்கிகளில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை தணிக்கை நடைபெறும். அப்படி தணிக்கை செய்ய வந்த வங்கியின் தணிக்கை அதிகாரிகள், டூப்ளிக்கெட் நகைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி அந்த வங்கியின் மேலாளரிடம் கேட்டபோது, அவர் அதிகாரிகளை சமாளித்து எல்லாம் சரியாக உள்ளதாக ரிப்போர்ட் எழுத வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது வெளியே வந்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள வங்கி கிளை தரப்பில் இருந்து காவல்நிலையத்தில் புகார் சொன்னதாக கூறப்படுகிறது. போலிஸார், வங்கி அதிகாரியுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு, தங்க நகை கடன் பிரிவுக்கு சம்மந்தம்மில்லாத ஒரு அதிகாரியை மாட்டவைத்துவிட்டு அந்த வங்கி மேலாளரும், மற்றொரு அதிகாரியும் தப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவி, அந்த வங்கியில் தங்க நகை வைத்து கடன் வாங்கிய மக்கள், தங்கள் நகையையும் மாத்திவிட்டார்களோ என அதிர்ச்சியில் உள்ளனர். வங்கியின் தலைமை நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகள் வங்கி பெயர் கெட்டுப்போய்விடும் என திருடர்கள் தங்களது அதிகாரிகளாக இருப்பதால் அவர்களை காப்பாற்ற முனைவதாக கூறப்படுகிறது.