ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளனர். இதனால் காயமடைந்த இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்திற்கு காரணமான நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு இளைஞர்களையும் பாமக தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “பாமக இளைஞர்கள் இரண்டு பேரை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். இந்த சம்பத்திற்கு விசிகாவை சேர்ந்தவர்களும், அதன் அனுதாபிகளும்தான் காரணம். ஆனால் காவல்துறை அவர்களை கண்டுகொள்ளவில்லை. கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவிற்குத்தான் பொறுத்துக்கொள்வோம்; எங்களுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" என்று கடுமையாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கும் விசிகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாமென பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
blockquote class="twitter-tweet">இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.
பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விசிகவுக்கு எதிராக…
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 17, 2025