Skip to main content

நோட்டமிட்ட கடப்பாரை திருடர்கள்; தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Thieves of Noted Homes;viral cctv

கடலூரில் நள்ளிரவில் கடப்பாரையுடன் மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் கீழமணக்குடி பகுதியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சில நபர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரைப் பிடித்த அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஊர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஐந்து பேரையும் உட்கார வைத்திருக்கும் வீடியோ காட்சிகளும், கடப்பாரையுடன் கொள்ளை அடிப்பதற்காக வேவு பார்க்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை' - மீண்டும் முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Father's health is not good'-MR Vijayabaskar seeks anticipatory bail again

தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் முன்ஜாமீன் மனுவை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.தொடர்ந்து தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஒருமுறை முன்ஜாமீன் மனு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க வேண்டி இருப்பதால் சிபிசிஐடி போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story

திருட்டு ஆடுகளை வாங்கிய அதிமுக பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
AIADMK leader who bought stolen goats in Cuddalore was brutally treated

கடலூர் வண்டிப்பாளையம், ஆலைக்காலனியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன்(43). அதிமுக மாவட்ட பிரதிநிதி மற்றும் கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் கடந்த 29ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு  வந்த மர்ம நபர்கள் புஷ்பநாதனை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளைப் பிடிக்க கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் ஒரு தனிப்படையும், இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் ஒரு தனிப்படையும் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகள், அப்பகுதி செல்போன் டவர்கள், புஷ்பநாதனின் செல்போன்களை ஆய்வு செய்தனர். தனிப்படை போலீசார் கடலூர், வண்டிபாளையம் ஆலைக்காலனி பகுதியைச் சேர்ந்த தணிகாசலம் மகன் நேதாஜி (24).  கடலூர் வசந்தராயன்பாளையம் பாலன் காலனி பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ்குமார்(23), கடலூர் வண்டிபாளையம் ஆலைக்காலனி பகுதியைச் சேர்ந்த முரளி மகன் அஜிஸ் (23) ஆகிய 3  இளைஞர்களைப் பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

AIADMK leader who bought stolen goats in Cuddalore was brutally treated

இதில் கடந்த ஓராண்டுக்கு முன் 3 பேரும் சேர்ந்து ஆடுகளைத் திருடியுள்ளனர். இதனை அதிமுக பிரமுகர் புஷ்பநாதனிடம் விற்பனை செய்துள்ளனர். திருடப்பட்ட ஆடுகள், கடலூர் தி.மு.க பிரமுகருக்கு சொந்தமானதாகும். இது தொடர்பான புகாரில் ஆடு திருடிய நேதாஜி, அஜய், சந்தோஷ் உள்ளிட்டவர்கள் 3 பேரையும் போலீஸார் பிடித்துள்ளனர். மேலும்  ஆடு திருட பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். தங்களை ஜாமீனில் எடுக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை போலீஸாரிடம் இருந்து மீட்டு தரவும் புஷ்பநாதனிடம் உதவி கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் உதவி செய்யவில்லை. ஜாமீனில் வெளிவந்த இவர்கள் இது குறித்து புஷ்பநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் புஷ்பநாதனுக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் புஷ்பநாதனை கொலை செய்ய திட்டமிட்ட 3 பேரும் கடந்த சில தினங்களாக புஷ்பநாதன் நோட்டமிட்டு கடந்த 29ஆம் தேதி இரவு கொலை செய்தது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இத்தத்கவலறிந்து ஆத்திரமடைந்த புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளையும் சூறையாடினர். மேலும் ஜூலை 1-ஆம் தேதி புஷ்பநாதனின் இறுதி சடங்கு நடைபெறுவதையொட்டி. அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் கடலூர் பகுதியில் பரபரப்பாக இருந்தது. ஆடு திருடிய சம்பவ வாக்குவதாம் கொலையில் முடிந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை அதிர்ச்சி அளிப்பதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.