இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், 'பத்தாண்டு காலம் பிரதமர் மோடி ஒரு சிறப்பான ஆட்சியை இந்திய திருநாட்டிற்கு தந்து கொண்டிருக்கிறார். மீண்டும் மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்ற வெளிப்பாட்டை தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். அவர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும்.
இந்த பேருந்து நிறுத்த போராட்டம் வெற்றி அடையும் வரை தொடரும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது மத்திய அரசு அகவிலைப்படி அறிவித்த உடனே அதை அடிப்படையாகக் கொண்டு அதிமுக அகவிலைப்படியை உயர்த்திக் கொண்டு வந்தது. போனசும் தந்தது. அனைத்து சலுகைகளையும் அதிமுக ஆட்சியில் தந்தோம். மத்திய அரசு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டார்கள். மாநில அரசு தான் கொடுக்கவில்லை. திமுக மக்கள் விரோத ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. திமுக அரசின் மீது மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தெரியவரும்'' என்றார்.