Skip to main content

பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழாமல் இருக்க பூரண மதுவிலக்கு அவசியம் - விஜயா ரகாட்கர்

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
bjp

 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பூரண மதுவிலக்கு அவசியம் என்று பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி விஜயா ரகாட்கா் கூறியுள்ளாா். 


             மூன்று நாள் சுற்றுபயணமாக தமிழகம் வந்துள்ள பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி விஜயா ரகாட்கா் நேற்று(22.7.2018) திருச் நடந்த மகளிரணி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இன்று(23.7.2018) நாகா்கோவிலில் நடந்த மகளிரணி சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டாா்.


          அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசும் போது... தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளா்ந்து வருகிறது. கிராம புற பெண்கள் அதிகம் போ் பா.ஜ.க வில் இணைந்து வருகிறாா்கள். 2021 சட்டமன்ற தோ்தலில் பா.ஜ.க வின் பங்களிப்பு பொிய அளவில் இருக்கும். அந்த தோ்தலில் பா..ஜ.க ஓரு தனிதன்மையை ஏற்படுத்தும். 

 

bjp


             பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கும் கல்விக்கும் பா.ஜ.க அரசு  அதிக அக்கரை எடுத்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கான முத்ரா வங்கி கடன் தமிழகத்தில் அதிகம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் பெண்களின் ஆரோக்கிய முன்னேற்றதிற்காக நாடு முமுவதும் கழிவறைகள் மத்திய அரசால் கட்டப்பட்டு வருகிறது. பெண்களின் பேறு கால விடுமுறை 28 வாரங்களாக உயா்த்தப்பட்டுள்ளது. 


            பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழும்  போது மத்திய அரசு இரும்புகரம்  கொண்டு அதை தடுக்கிறது. போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கும் விதமாக அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களை மதிக்ககூடிய அவா்களின் முன்னேற்றத்துக்காக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைகள் தடுக்க பட வேண்டுமென்றால் இங்கு கண்டிப்பாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றாா். பேட்டியின் போது தேசிய மகளீரணி பொதுச் செயலாளா் வழக்கறிஞா் விக்டோாியா கௌாி உடன் இருந்தாா்.
                                 

சார்ந்த செய்திகள்