Published on 20/06/2018 | Edited on 20/06/2018

அடக்குமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மக்கள் போராளிகளுக்கு சமூக விரோதி என பட்டம் சூட்டாதீர்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 20.06.2018 புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் திராவிடர் விடுதலை கழகம், எஸ்.டி.பி.ஐ., தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய தேசிய லீக், மே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
படம்: அசோக்குமார்