திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நடந்து முடிந்துள்ளது. மலையில் ஏற்றப்பட்ட தீபம் வரும் 21ந் தேதி வரை மலை உச்சியில் தீபம் எரியும். தீபத்தை காணவும், கிரிவலம் வரவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்கு வருகின்றனர்.
டிசம்பர் 15ந் தேதி வார விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான கார்களில், வேன்களில், பேருந்துகளில் பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். இந்த வாகனங்களால் நகருக்குள் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அப்படி வந்த பக்தர்கள் கோயிலுக்குள் அண்ணாமலையாரை காணச்சென்றனர். இதனால் கோயிலுக்குள் ஏகப்பட்ட இடநெருக்கடி மற்றும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் - உண்ணாமலையம்மனை தரிசனம் செய்தனர்.
கோயிலுக்குள் வரும் பக்தர்களை ஒழுங்குப்படுத்த வேண்டிய கோயில் நிர்வாகம், அதற்கான பணியாளர்களை நியமனம் செய்யவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.