எம்ஜிஆர் ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களை உருவாக்கிய ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென டிடிவி ஓபிஎஸ் மகனுக்கு எதிராக தேனி பாராளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கப் போவதாக அறிவித்து விட்டார்.
அதனால் ஆண்டிபட்டி தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமாரை டி டிவி களத்தில் இறங்கி இருக்கிறார்.
ஏற்கனவே அதிமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜனும். திமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் மகாராசனும் தேர்தல் களத்தில் பவனி வருகிறார்கள்.
இந்த நிலையில் டி டி வியும் அதை ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமாரை வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். இந்த மூன்று பேருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இத்தொகுதியில் ஒரே சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால் அந்த சமூகத்தினர் ஓட்டை தக்கவைப்பதற்காக திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் இப்படி ஒரே சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை களத்தில் இறக்கி அந்த ஓட்டுகளை தக்கவைக்க இருக்கிறார்கள். இதனால் அந்த சமூகத்தினர் தற்பொழுது யாருக்கு ஓட்டு போடப் போகிறோம் என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.