முரண், மோதல் என அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஒற்றைத் தலைமை குறித்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டமானது நிறைவுற்றது.
இந்நிலையில் இன்று (24/06/2022) பா.ஜ.க. சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அதேபோல், ஓ,பி.எஸ் மற்றும் இ,பி,எஸ் தரப்பிலிருந்து தம்பிதுரையும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஓ.பி.எஸ். நரேந்திர மோடியிடம் கட்சி குறித்து பேச முயன்றதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்தத் தகவலை தம்பிதுரை இ.பி.எஸ்.யிடம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.