Published on 15/09/2018 | Edited on 15/09/2018

ஈரோட்டில் இன்று நடந்த மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் விழாவில் நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டு பேசும் போது " வைகோவின் அறிவு, திறமை, ஆற்றல், தியாகத்தை இந்த சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் சமுதாயத்திற்குதான் இழப்பு. சமூக அநீதி எது என்று தெரிந்தால்தான், சமூக நீதி எது என்பது புரியும். ‘டூப்’ போடாத போராளியாக வைகோ விளங்குகிறார். அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடுபவர்கள் ஒருநாளாவது அவரைப்போல் வாழ்ந்து பார்க்க வேண்டும். யார் பிரதமரானாலும், முதல்வரானாலும் சமுதாயத்திற்கு நலன் பயக்கும் திட்டங்களை வைகோ அவர்களுக்கு ரகசியமாக அவர்களிடம் கொடுத்தால் நாடு நலம்பெறும்" என்றார்