விழுப்புரம் மாவட்டத்தில் கருங்காலிபட்டு அரசு ஆதிதிராவிடர் நல ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்குள் கடந்த சில மாதங்களாக மோதல்கள் நடந்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு கணித ஆசிரியர் சேட்டு என்பவரை சக ஆசிரியர்கள் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர் என்றும், தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் பள்ளிக்கு திரும்பிய நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆசியர்களுக்கிடையேயான மோதல் தொடர்பாக புகார் சென்றதையடுத்து, ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் செல்வராஜ் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணைக்குப் பின்னர், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் செய்ய கல்வித் துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.