Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

salem district mettur dam water level raised

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

 

இன்று (23/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,907 கனஅடியில் இருந்து 17,129 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.83 அடியாகவும், நீர் இருப்பு 63.33 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

 

இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடி வந்து கொண்டிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்