Skip to main content

ரயில்வே நடைமேடை கட்டணம் 5 மடங்கு உயர்வு 

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

இந்தியாவில் 129 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு வருகிற  31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து இருக்கிறது. அதோடு சுற்றுலாத்தலங்கள், கோயில்களில் மக்கள் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  

 

Railway Stage hike 5 times higher


இந்நிலையில் மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் 50 ரூபாய் ஆக உயர்த்தியுள்ளது தென்னக ரயில்வே.

ஏற்கனவே இன்று மத்திய ரயில்வேயில் நடைமேடைகளுக்கான டிக்கெட் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 6 கோட்டங்களில் உள்ள 250 நடைமேடைகள் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமேடை கட்டணம் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ள நிலையில் தென்னக ரயில்வேயும் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மதுரையில் நடைமேடை கட்டணம் 50ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்