தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தாக்கலாகிய இ-பட்ஜெட்டை, கணினித் திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் துவங்கினார். ஆனால் சில நொடிகளிலேயே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு காரணமாக லிட்டருக்கு 3 ரூபாய் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு காரணமாக ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும்.நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த வருவாய் செலவினம் 2,61,188.57 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் மொத்த வருவாய் 2,60,409.26 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் வருவாய்ப் பற்றாக்குறை 58,692.58 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது'' எனக் கூறினார்.
இந்நிலையில், தமிழகத்தின் டாஸ்மாக் வருமானம் 35,000 கோடியாக உள்ளதாக தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வழக்கம்போல் டாஸ்மாக் வருமானம் உள்ளது. ஆனால், டாஸ்மாக் வருமானத்தை வைத்து மட்டுமே தமிழக அரசு எதிர்காலத்தில் செயல்பட முடியாது. அறிவிப்பின்படி நாளை முதல் பெட்ரோல் மீதான வரியில் 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வரும் என கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.