Skip to main content

சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து 2 எம்.எல்.ஏக்கள் வழக்கு

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தினகரன் அணியில் பொறுப்பில், பதவியில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் இருக்கிறார்கள். மேலும், டிடிவி தினகரனோடு  3 பேரும் இருக்கும் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும்  

 

case

 

அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள் எனவே 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  புகார் அளித்திருந்தார்.  

 

அதனையடுத்து சபாநாயகர் தனபால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். அந்த நோட்டிஸில் மூன்று பேரும் 15 நாட்களுக்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  

 

இந்நிலையில் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் இந்த  நோட்டீஸுக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்