செந்தில்பாலாஜிக்கு நன்றி சொன்ன தம்பிதுரை..!
கரூரில் பல கட்ட அரசியல் கட்சிகளின் கோஷ்டி பிரச்சனைகளுக்கு பிறகு இன்று சுமார் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,

அடுத்த ஆண்டு கரூர் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புரட்சி தலைவி அம்மா அவர்கள் கரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க ஒப்புதல் அளித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தார்.
புதுக்கோட்டையில் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. ஆனால் கரூரில் முதலில் குப்பிச்சிபாளையம் என்று அறிவித்து இடம் பற்றாக்குறை காரணமாக கரூர் சணப்பிரட்டி இடம் தோ்வு செய்யப்பட்ட நிலையில் அம்மா மறைவுக்குப்பின் முன்னால் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் சணப்பிரட்டியில் தான் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து. இப்போது சணப்பிரட்டியில் மருத்துவ கல்லூரி அமைக்க எந்த இடையூறும் இல்லை என்று தீா்ப்பு வந்ததால் அதற்கான பூமி பூஜை நடைபெறுகிறது.
ரூ.250 கோடி மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி அமைக்க 16 ஏக்கர் நிலமும், மருந்தகம் அமைக்க 5 ஏக்கர் நிலமும் சோ்த்து 21 ஏக்கர் நிலத்தில் அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மருத்துவ கல்லூரி அமைக்க பாடுபட்ட முன்னால் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் எ.ஆர்.காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன், என்.எஸ்.கிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி, மருத்துவ உயா் அதிகாரிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிட்டதக்கது.
- ஜெ.டி.ஆர்