Skip to main content

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.! பரப்புரை மூலம் 1 கோடி மக்களை சந்திப்போம்!- மு.தமிமுன் அன்சாரி

Published on 02/10/2019 | Edited on 03/10/2019

 

அக் 2 காந்தியடிகளின் 150 வது பிறந்த தினத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் "மது எதிர்ப்பு பரப்புரை" யின் தொடக்கமாக சென்னை சேப்பாக்கத்தில் "மது எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைப்பெற்றது.

 

THAMIMUN ANSARI 01


இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி உறுதிமொழியை வாசிக்க, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், ஷமீம் அஹ்மது, ஷஃபி, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், MJTS தலைவர் பம்மல் சலீம்,, மருத்துவ சேவை அணி செயலாளர் M.M.பாஷா , மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் பஷீர்,IKP துணை செயலர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றனர். 
 

மஜக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்வில், மஜக வின் மது எதிர்ப்பு பரப்புரை பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.

 

பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பொதுச் செயலாளர் கூறியதாவது, காந்தியாரின் 150வது பிறந்த நாளில், அவரது மது எதிர்ப்பு கொள்கையை மஜக முன்னெடுத்திருக்கிறது. சென்னையில் இன்று மஜக நிர்வாகிகள் ஒன்று கூடி மது எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்று பரப்புரையை தொடங்கி வைத்துள்ளோம்.

 

THAMIMUN ANSARI 01


 

துண்டு பிரசுர வினியோகம், சுவரெழுத்து, சுவரொட்டி, பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள், வீதி முனை கூட்டங்கள், ஊடக செய்திகள், சமூக இணையதள கருத்தாக்கங்கள், தனிநபர் மற்றும் குழு சந்திப்புகள், ஒலி-ஒளி பதிவுகள், வாகனப் பரப்புரைகள், மது எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றல், மதுவுக்கு எதிரான முழக்கங்கள் என 12 வகையான வடிவங்களுடன் எமது ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மது எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பனியன்களுடன் களப்பணியாற்ற உள்ளனர்.

நகரங்கள், கிராமங்கள் என அக்டோபர் 15 வரை எமது பரப்புரைகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பூரண மது விலக்கை அமல்படுத்துவோம் என்று கூறி, 500 டாஸ்மாக் கடைகளை முதல் கட்டமாக மூடினார்.

 அந்த வழியில் முதல்வர் எடப்பாடியார் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோறுகிறோம். சட்டசபையிலும் இக்கருத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இப்பரப்புரையின் வழியாக 1 கோடி மக்களை சந்தித்து, இக்கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றார்.
 

இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மற்றும் மேற்கு, வட சென்னை கிழக்கு மற்றும் மேற்கு, தென் சென்னை கிழக்கு மற்றும் மேற்கு , திருவள்ளுர் கிழக்கு மற்றும் மேற்கு, காஞ்சி வடக்கு மாவட்ட மஜகவின் நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.
 

THAMIMUN ANSARI 01



பிறகு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வாகனங்களில் செல்வோரிடம் மது எதிர்ப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அருகில் விஏஓக்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களிடமும், அங்கு உரையாற்ற வருகை தந்திருந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புத் தலைவரான பி.ஆர். பாண்டியனிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்